Tab Article
தொண்டர் தம் பெருமையைச் சொல்லிடவும் , எழுத்திடவும் இயலுமோ ? தொண்டர்சீர் பரவுவாரான சேக்கிழார் பெருமான் சைவ அடியவர்களைப் பற்றி உள்ளது உள்ளபடி எடுத்துக்கூறிய மெய்ந்நூலே திருத்தொண்டர் புராணம் எனப் பெறும் வரலாற்றுக் காப்பியமான பெரிய புராணம் . இந்நூல் நமது சைவ சமயத்தின் 12-ஆம் திருமுறையாக விளங்கும் பெருமை கொண்டது.