சுமார் 30 வருடத்திற்கும் மேலாக வியாபாரத்தில் உள்ள நாங்கள் தற்போது மின் வணிக வாணிகத்தில் அடியெடுத்து வைக்கிறோம்.
வீடு கட்டத் தெரியாமல் குகைகளில் வாழ்ந்தார்களாம். அந்தப் பழஙகாலத்தைக் கற்காலம் என்று சொல்லுகிறோம். அந்தக் காலத்தில் மனிதர்கள் கையில் என்னென்ன கருவிகள் இருந்தன தெரியுமா? துப்பாக்கி, பீரங்கி, அணுக்குண்டு இவைகள் அப்போது இல்லை. வாள், வேல்,வில் முதலான கருவிகளும் இல்லை. அந்தக் காலத்தில் இருந்த கருவிகள் எல்லாம் கல்லால் செய்யப்பட்டவைகளே. கல்லால் செய்த அந்தக்கருவிகளும் மழ மழ என்று செய்யப்படவில்லை; கரடு முரடாக இருந்தன. அந்தக் காலத்து மனிதர்கள், வழியில் கிடைத்த கல்லை எடுத்து, இப்படியும் அப்படியும் உடைத்துத்தீட்டி ஒரு வகையாகத் தங்கள் தொழிலுக்குப் பயன் படுத்திக்கொண்டார்கள்.
கல்லால் செய்த அப்படிப்பட்ட கருவிகளை வைத்துக்கொண்டே அவர்கள் மிருகங்களைக் குத்திக் கொன்றார்கள்; அவைகளை அறுத்துத் தின்றார்கள். கல்லால் செய்த அந்தக்காலத்துக் கத்தியை ஒரு புறம் நினைவில் வைத்துக்கொண்டு, மற்றொரு புறம் நாம் இப்போது கையாளுகின்ற பளபளப்பான இரும்புக்கத்தியை எண்ணிப்பாருங்கள். அதற்கும் இதற்கும் எவ்வளவு வேறுபாடு? கற்காலத்துக் கருவிகள் படிப்படியாக மாறி, வளர்ந்து முன்னேறி இந்தக் காலத்துக் கருவிகள் ஏற்பட்டுள்ளன.