Tab Article
திருஞானசம்பந்தர் - திருநாவுக்கரசர் - சுந்தரர் ஆகியோரின் தேவாரம் , மாணிக்கவாசகரின் திருவாசகம் , திருக்கோவையார் , திருவிசைப்பா , திருமூலர் திருமந்திரம் தொடங்கி பன்னிரண்டாம் திருமுறை சேக்கிழார் வரலாறு , அறுபத்து மூவர் வரலாறு என்று மொத்தம் 18,375 பாடல்கள் அனைத்தும் ஒரே புத்தகத்தில் இடம் பெற்றிருப்பது தமிழ் ஆர்வலர்களுக்கும் மாணவர்களுக்கும் சைவர்களுக்கும் நல்விருந்து என்றே சொல்ல வேண்டும். தமிழுக்கு சைவம் செய்துள்ள அருந்தொண்டின் தொகுப்பே இந்நூல். திருமுறைகள் வேத மந்திரங்களுக்கு மேலானவையாகும்.